உடல் எடையை குறைக்க பப்பாளி பழம் மிகவும் உதவியாக இருக்கும். இது வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உடலில் பல ஊட்டச்சத்துக்களின் தேவையையும் பூர்த்தி செய்யும்.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளன. இது எடையைக் குறைக்க உதவுகிறது.
உண்ணும் முறை
வயிற்றில் ஏகப்பட்ட கொழுப்பு சேர்ந்து பிரச்சனை ஏற்பட்டால் பப்பாளியை நறுக்கி தயிரில் சேர்த்து காலை உணவில் சாப்பிடலாம்.
இதில் மேலும் சில பழங்களையும் சேர்க்கலாம். இதில் ஊறவைத்த உலர் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இதன் மூலம் கொழுப்பு நிறைந்த மற்ற உணவுகளை அதிகமாக உண்பதை எளிதில் தவிர்க்கலாம்.
ஒரு கிளாஸ் கிரீம் பால் மற்றும் பப்பாளி சாப்பிட்டால் போதும். இதன் மூலம் புரதச்சத்தும் கிடைத்து பல மணி நேரம் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வும் இருக்கும். ஆகையால்வயிற்றுத் தொப்பையை குறைக்க விரும்புபவர்கள் காலை உணவில் பால் மற்றும் பப்பாளி சாப்பிடலாம்.
சிலருக்கு பப்பாளி பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் பப்பாளி சாட் செய்தும் சாப்பிடலாம். இதற்கு, பப்பாளியை துண்டுகளாக வெட்டி, அதன் மீது கருப்பு உப்பு, கருப்பு மிளகு தூள் தூவி உட்கொள்ள வேண்டும். இது மிகவும் லைட்டாக இருப்பதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.