மாத்தறை பொல்ஹேன மற்றும் வெல்லமடம கடற்கரைகளில் கடல் நீர் அவ்வப்போது பச்சை நிறமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கரும் பச்சையான கடல் நீரில் செல்வதற்கு பலர் பயப்படுகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த நாரா நிறுவன அதிகாரிகள் இன்று கடற்கரைக்கு வந்துள்ளனர்.
அசாதாரண பாசி வளர்ச்சியால் கடல் நீரின் நிறம் மாறியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் கருத்துக்களை வழங்கிய நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி திரு.உபுல் லியனகே;
“பருவமழை தீவிரமடைந்ததால், கடலில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் மாறுவதுடன், ஊட்டச்சத்து அளவுகளில் ஏற்படும் மாற்றத்தால், அசாதாரணமான முறையில் பாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானது. ஆனால் நேற்று, இந்த கடற்கரையின் பயன்பாடு தடுக்கப்பட்டது.
இன்றைய நிலவரப்படி,இயல்பு நிலைக்கு பயன்பாடு திரும்பியுள்ளது. மேலும் பரிசோதனைகளுக்கு மாதிரிகளை பெற்று அதற்கான காரணங்களை கூறுவோம்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.