முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதை காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுண்டல மறுத்துள்ளார்.
அதற்கு பதிலாக 60,000 பொது மக்களை இராணுவம் மீட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும், சரணடைந்தவர்கள் காணாமல் போனார்கள் என்ற கூற்றையும் அவர் மறுத்துள்ளார்.
விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள்
காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அதற்கு எதிரான பிரிவினரால் கடத்தப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வெளிநாட்டில் வசிப்பவர்கள், காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் 50 விடயங்களை அலுவலகம் கண்டுபிடித்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.