கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உத்தியோகபூர்வமாக ஆரம்பம் பிரதேச செயலக ஆட்பதிவுக் கிளையில் பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறிலாலால் நேற்று உத்தியோகபூர்வமாக இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு... Read more »
பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வங்கி வட்டி விகிதங்களும் இதன் போது குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்க செய்தியாளர்... Read more »
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்நிலையில் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, தெரிவித்தார். செல்லுபடியாகும் காலத்தை... Read more »
யாழ் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது அதற்காக 168... Read more »
யாழ். மாவட்ட சர்வமத செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் யாழில் இன்று அமைதி ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(20-06-2023) காலை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் ஆரம்பித்து வைத்தியசாலை முன் வீதியூடாக ஊர்வலம் நூலகத்தை... Read more »
யாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழில் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் வீடு மீதே இவ்வாறான செயலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தச் சம்பவம் இன்றிரவு 10.30 மணியளவில் (ஜூன் 19) மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம்... Read more »
நாட்டில் குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இரண்டு வகையான மருந்துப் பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த இரு... Read more »
பொருளாதார நெருக்கடிகள் உட்பட மற்றும் பல காரணங்களை முன்வைத்து பாடசாலை கல்வியை இடை நடுவில் கைவிட்டுச் செல்லும் மாணவர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சிகளை வழங்கி, தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். திங்கட்கிழமை (19) மஹரகம பிரதேச... Read more »
புதுக்குடியிருப்பு பகுதியில் நண்பர்கள் முன்னிலையில் மனைவி குற்றம் சாட்டியதால் மனமுடைந்த 24 வயது கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக்கக்கொண்டுள்ள குறித்த கணவன், நேற்று இவர் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த இருந்த... Read more »
யாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் விருதுகளில் ஒன்றான OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார். இந்த விருது பிரித்தானிய மன்னரின் பிறந்தநாளில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச்... Read more »