மாவீரர் தின நினைவேந்தல் விசாரணையில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் லெட்சுமணன், தேவபிரதீபன் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் தின விழா தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காகவே இந்த விசாரணை இடம்பெற்றது. மேலும், பயணிப்பதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவு சான்றிதழை பொலிஸ் நிலையத்திற்கு... Read more »

தமிழரசுக்கட்சி தொடர்பாக செய்திகள் உண்மைக்கு புறம்பானது

அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை குறிப்பிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றவேளை மேற்கண்டவாறு தெரிவித்தது. கல்முனை தமிழரசுக்கட்சி... Read more »
Ad Widget

மட்டக்களப்பு இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும்: சாணக்கியன்

மட்டக்களப்பில் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து... Read more »

கல்முனை அருகே நிலநடுக்கம்

அம்பாறை மாவட்டம் கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை 5.1 மெக்னிடியுட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 3:41 மணியளவில் கல்முனையில் இருந்து 51 கிலோ மீற்றர் தொலைவில், கடலுக்கு அடியில் 366.2 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம்... Read more »

படகுடன் காணாமல் போயுள்ள மீனவர்கள்

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில் பைவர் இயந்திர படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்ற இருவர், 3 தினங்களாகியும் வீடு திரும்பாது இயந்திர படகுடன் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கடற்படையினர் தேடிவருவதாக இன்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். கல்மடு... Read more »

மட்டக்களப்பு சீர்திருத்த இல்லத்தில் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் பெண் மேலாளர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள்!

மட்டக்களப்பு – கல்முனை சீர்திருத்த இல்லத்தில் சிறுவன் ஆனந்ததீபன் தர்சாத் உயிரிழந்தமைக்கு காரணமாக பெண் மேலாளர் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்னடத்தை இல்லத்தில் சேர்க்கப்பட்ட சிறுவனை விக்கட் பொல்லால் அடித்துக் கொன்ற பெண் போதைக்கு அடிமையானவர் என்றும், நன்னடத்தை இல்ல சிறுவர்களை துஸ்பிரயோகங்களிற்கு... Read more »

பொலிசாரால் அச்சத்தில் மடக்களப்பு மக்கள்!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றவர்களின் வரவழைத்து பொலிஸார் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையால் மக்கள் பீதியில் உள்ளதாக கூறபடுகின்றது. நினைவேந்தலில் பங்கேற்றவர்களின் மோட்டர் சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று ஊடகவியலாளர் உட்பட நான்குபேரை நேற்று வெள்ளிக்கிழமை (8) வாழைச்சேனை... Read more »

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

அம்பாறை – மஹாஓய பிரதேசத்தில் மாட்டு கொட்டகை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹாஓய – தம்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் மஹாஓய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக... Read more »

சாரதியால் தாக்கப்பட்ட நேர கண்காணிப்பாளர் வைத்தியசாலையில்

அம்பாறை அக்கரைப்பற்று பேருந்து தரிப்பிடத்தில் இலங்கை போக்குவரத்து சபை நேர கண்காணிப்பாளருக்கும் தனியார் பேருந்து சாரதிக்கும் இடையில் இன்று (08) முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த சாரதி, நேர கண்காணிப்பாளரை தாக்கியதில் அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரிய நேரத்திற்கு பேருந்தை... Read more »

பூசாரியின் தாக்குதல் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் உள்ள பௌத்த பத்தினி தேவாலயத்தில் நோயை குணப்படுத்திக் கொள்ள சென்ற சகோதரனும் சகோதரியுமான இருவர் மீது ஆலைய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் ஆண் உயிரிழந்துள்ளார். அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த... Read more »