மட்டு – பொலன்னறுவை வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படும்

பராக்கிரம வாவியின் வான் கதவுகள் இன்று (29) இரவு 10.00 மணியளவில் திறக்கப்படவுள்ளதால், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும் என்று பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு... Read more »

கரடி தாக்கியதில் தந்தை மகனும் படுகாயம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு ரூபஸ்குளம் காட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை (29) காலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன், கரடி தாக்கியதில் தலை, காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத்... Read more »
Ad Widget

சட்டவிரோத மது விற்பனையை எதிர்த்து மட்டுவில் ஆர்ப்பாட்டம்

கசிப்பு மற்றும் சட்டவிரோத மது விற்பனையை முழுமையாக ஒழிக்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் கல்லடி வேலூரில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக நிறைவடைந்தது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூரில்... Read more »

தமிழர்கள் இனப்பிரச்சினையை கைவிடவேண்டும்: இதுவே அரசின் திட்டம்

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தமிழ் தரப்பினர் இனப்பிரச்சினையை கைவிட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திட்டம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பில் கூட்டுறவு மீனவர் சங்கம் மற்றும் மக்கள்... Read more »

மட்டு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள்

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருளொன்று இன்று (28) காலை ஒதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அப்பொருள் இன்று (28) காலை கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கரை... Read more »

மட்டுவில் 46 கைதிகள் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், இரண்டு பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற... Read more »

100 நாட்களை நிறைவு செய்த மயிலத்தமடு போராட்டம்

மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை நிலத்தை அரச அனுசரணையுடன் வலுக்கட்டாயமாக சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பால் பண்ணையாளர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 100 நாட்களை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பால் பண்ணையாளர்களினால் நடைபவனியும் ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கு –... Read more »

புலிகள் ரணிலை நம்ப வேண்டாம் என்றது நிரூபனமாகியுள்ளது: கஜேந்திரகுமார்

2005ஆம் ஆண்டிலேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அப்போது இது குறித்து பலரும் குழம்பினர். ஆனால் அன்று தீர்க்கதரிசனமாக புலிகள் தெரிவித்ததை இன்று ரணில் விக்கிரமசிங்க அவருடைய செயற்பாடுகளால் நிரூபித்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

பரிகாரம் என கூறி 8 பவுண் தங்க நகைகள் கொள்ளை

கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பரிகாரம் செய்வதாக கூறி உணவக உரிமையாளரின் மனைவியிடம் 8 பவுணுக்கு அதிகமாக நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாகியுள்ள இந்தியர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் சம்பவமம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சம்பவம் உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை(20)... Read more »

“100“ நாளை எட்டியது: பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நூறு நாட்களை எட்டவுள்ள நிலையில் 100ஆவது நாளில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேய்ச்சல் தரைகளை மீட்டு தருமாறு தெரிவித்து மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நாளை மறுதினம் 23 ஆம் திகதியுடன் நூறு... Read more »