ஆசிரியர்களுக்கிடையில் கைகலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கிடையில் ஏற்றப்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களுக்கிடையில் இன்றையதினம் முரன்பாடு ஏற்ப்பட்டுள்ளது. அது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது.... Read more »

வான் பாயும் 479 குளங்கள்!

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால், பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றன. குறிப்பாக... Read more »
Ad Widget

2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் அனைவருக்கும் பூரண கண்பார்வை

2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் அனைவருக்கும் பூரண கண்பார்வையை வழங்கும் நிலையான அபிவிருத்தி நோக்கு (SDG) திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் வடக்கு மாகாணத்தில் கண் பார்வையில் சிக்கல்களை  எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைய, வடக்கு... Read more »

வவுனியா தமிழ் சங்க கணக்கறிக்கையை கோரி தகவல் அறியும் சட்டம் மூலம் தாக்கல்

வவுனியாவில் இயங்கி வரும் தமிழ் சங்கம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் வவுனியா பிரதேசசெயலகத்தில் குறித்த விண்ணப்பமானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா தமிழ் சங்கம் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு... Read more »

வவுனியாவில் மாணவியை தாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்

வவுனியாவில் மாணவி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டிலும், குறித்த மாணவியினை தற்கொலைக்கு தூண்டியமை தொடர்பிலும் பாடசாலை ஆசிரியரை நேற்றைய தினம் வவுனியா,... Read more »

அரசாங்கத்தின் கைக்கூலியாக உலகத் தமிழர் பேரவை

உலகத்தமிழர் பேரவையின் செயல் முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்களை நினைவுப்படுத்துகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் மேற்கண்டவாறு கூறினார். அவர்... Read more »

இரு பாடசாலைகள் உடைத்து திருட்டு!

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள அல் அக்ஸா வித்தியாலயம் மற்றும் ஆயிசா வித்தியாலயம் என்பவற்றுக்குள் நுழைந்த திருடர்கள் பாடசாலை கதவுகளை உடைத்துள்ளதுடன், பாடசாலையில் இருந்த மோட்டர்கள்,... Read more »

ஜனாதிபதிக்கு தேர்தல் வருத்தம் – சி. சிறிதரன் எம்.பி

ஜனாதிபதிக்கு தேர்தல் வருத்தம் இருக்கின்றது. ஆனால் தேர்தல் நடக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் தலைவருக்காக போட்டியிடவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு... Read more »

வவுனியாவில் வாள்வெட்டு – இருவர் காயம்

வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம்ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர் அங்கு நின்ற இருவர் மீது வாளால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர்... Read more »

மகளை தாயாக்கிய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் தனது மகளை தாயாக்கிய ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். நேற்று (04) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி உத்தரவு வழங்கப்பட்டது. அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மகளுக்கு 06... Read more »