மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய பல வீதிகளில் பொறுப்பற்ற விதத்தில் சிலர் கழிவுகளை வீசி வருவதாக பொதுமக்களும்,சுகாதார ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் இரு... Read more »
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரச... Read more »
முச்சக்கர வண்டியில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் . இச் சம்பவம் பொத்து விலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் வியாழக்கிழமை (9) காலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது .... Read more »
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்படி, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி... Read more »
இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து... Read more »
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலகட்டத்திற்கான அரசின் செலவு ரூ. 4,616 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு அமைய... Read more »
சுற்றுலா விசாக்களில் வெளிநாட்டினர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க ஒரு வழிமுறை உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று தெரிவித்தார். சுற்றுலா விசாக்களில் வரும் வெளிநாட்டினர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிக்கைகள் வந்துள்ளதாகவும், அரசாங்கம் இதை ஒரு பிரச்சனையாக அடையாளம் கண்டுள்ளதாகவும் பிரதமர்... Read more »
“Clean Sri Lanka” வேலைத்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சோதனை நடவடிக்கைக்கு எதிராக தனியார் பேருந்து் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள் எல்லை மீறி பஸ்களை சோதனையிடுவதாகவும், தேவையற்ற முறைகளில் செயற்படுவதாகவும்... Read more »
77வது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் கொண்டாட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் விழாவில் பங்கேற்கும் அழைக்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கை 3000 இல் இருந்து 1600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டார். இந்த... Read more »
வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பெறப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பொது மக்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது... Read more »

