நண்பனுடன் கடலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ். ஊர்காவற்றுறையில் நண்பனுடன் கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27) உடையவரே ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். ஊர்காவற்றுறை 9ஆம் வட்டாரத்திலிருந்து நேற்றிரவு நண்பருடன் ஜக்சன் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளார். ஜக்சனுக்கு மீன்பிடித் தொழிலில் அனுபவமில்லை... Read more »

இலங்கையின் ஆடைத்துறை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

இலங்கையில் ஆடை ஏற்றுமதி வருமானம் குறைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் கடந்த 31ஆம் திகதி வெளியிட்ட இவ்வருட பெப்ரவரி மாதத்திற்கான வெளிநாட்டுத் துறையின் செயற்பாடுகளைக் காட்டும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்03.04.2023

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு... Read more »

மலசல கூட குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தை!

அம்பாறையில் மலசல கூட குழியில் வீழ்ந்து இரண்டரை வயது ஆண் பிள்ளை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை (01-04-2023) பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த பிள்ளையின் தந்தை வெளிநாடொன்றில் தொழில் புரிந்துவரும்... Read more »

யாழில் அனுமதி இன்றி நடாத்தப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து சிறுவர்கள் மீட்பு!

யாழ். இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்நடத்தை அலுவலர்களினால் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ அறிக்கைக்காக யாழ் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ... Read more »

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதிக் காலம் காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கோழிப்பண்ணை தொழிலாளிகள் ஏற்கனவே நட்டத்தை சந்தித்து வருவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின்... Read more »

இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கைது!

இலங்கையில் விடுதி ஒன்றில் தங்கி பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றிய சீன பிரஜைகள் 39 பேர் அடங்கிய குழு ஒன்றை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில்... Read more »

நாட்டு மக்களுக்கு சுகாதார துறையினர் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையினர் சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலையில்... Read more »

வீடொன்றில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு!

வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்தே இச் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொதட்டுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். Read more »

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு!

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கிடைத்துள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் முட்டை சந்தையில் ஏற்பட்டுள்ள... Read more »