வறுமையின் நிமித்தம் இறைச்சி உணவுகளை தவிர்க்கும் இலங்கையர்கள்

இலங்கையிலுள்ள வறுமையான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன நடத்திய ஆய்விலே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறைந்தளவில் மருந்துகளை பயன்படுத்தும் நோயாளர்கள்

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நோயாளர்களும் குறைந்தளவிலான மருந்துகளையே பயன்படுத்தி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 2022 ஆம் ஆண்டு 200 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக வீழ்ச்சியடைந்த நிலையில் உணவு பொருட்களின் விலை 50 வீதத்தாலும், ஏனைய பொருட்களின் விலை 70 வீதத்தாலும், உயர்ந்துள்ளன.

இறைச்சி மீன்களை தவிர்க்கும் மக்கள்

50 வீதமான குடும்பங்கள் தமது உணவில் இறைச்சி மற்றும் மீன்களை கைவிட்டுள்ளன.

11 வீதமானோர் புரத உணவை முற்றிலும் தவிர்த்துள்ளனர். இதில் பெருந்தோட்ட துறையினர் முழுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்கள். கடற்றொழில் சமூகமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor