உக்ரைனில் இருந்து ஏழு சரக்கு கப்பல்கள் வெளியேறியுள்ளன

101 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்களுடன் ஏழு சரக்கு கப்பல்கள் உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை வெளியேறியுள்ளது.

பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையினால் உக்ரைனிய தானிய ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து உலகளவில் ஏற்பட்ட உணவு தானிய நெருக்கடி மற்றும் விலையேற்றத்தை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை, துருக்கி, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் உக்ரைன் தானியம் ஒடேசா(Odesa) துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட தொடங்கியது.

ஜூலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவுடன் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு, சுமார் 341 தானிய சரக்கு கப்பல்கள் உக்ரைனிய துறைமுகத்தில் இருந்து வெளியேறியுள்ளது.

உக்ரைனிய அமைச்சகத்தின் தகவல் அடிப்படையில், இதுவரை சுமார் 7.5 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியம் உக்ரைன் ஏற்றுமதி செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மேலும் 7 சரக்கு கப்பல் சுமார் 101 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்களுடன் வெளியேறி இருப்பதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor