கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவித்தல்!

அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் இன்றைய தினம் (15.10.2022) டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

அதில், பயணிகள் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விசா கட்டணங்கள் உத்தியோகபூர்வ வங்கிகள் அல்லது அமெரிக்க தூதரகத்தின் தூதரக காசாளருக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

ஆவணங்களில் மோசடி
அமெரிக்காவுக்குச் செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்காக மோசடிகள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டி அமெரிக்க தூதரகம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

மேலும் விசா தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் இணையத்தள முகவரியொன்றும் தரப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுவாக கிரீன் கார்ட் (Green Card) என அறியப்படும் அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் (US Diversity Visa Program 2024) விண்ணப்பத்திற்காக திறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor