இலங்கையை நோக்கி வரும் அமெரிக்காவின் அன்பளிப்பு கப்பல்!

இலங்கைக்கு அமெரிக்காவினால் அன்பளிக்கப்பட்ட பி 627 என்ற கண்காணிப்பு கப்பல், இலங்கையை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்க கடலோர காவல்படையினால், 2021 ஒக்டோபரில் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட இந்த கப்பல், இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டு, 2022 செப்டம்பர் 3ஆம் திகதியன்று இலங்கையை நோக்கி புறப்பட்டது.

அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல், நேற்று நிரப்புதல் மற்றும் ஏனைய சேவைகளுக்காக பிலிப்பைன்ஸ் மணிலா பி 627 என்ற கப்பல் இதுவரை பசுபிக் பெருங்கடலில் 41 நாட்களில் சுமார் 7700 கடல் மைல்கள் (14260 கிலோ மீற்றர் ) பயணம் செய்துள்ளது.

இதற்கிடையில், சிங்கப்பூரில் உள்ள சாங்கியில் உள்ள துறைமுகத்துக்கு செல்லும் இந்த கப்பல், எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது

Recommended For You

About the Author: webeditor