எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06 மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுவதாகவும், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
10 சதவீத சம்பள உயர்வு கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட முடியாவிட்டால் அரசாங்கம் தலையிட்டு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் போன்று பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.