இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக 24 மணி நேரத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி,12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (12.10.2022) காலை 8:30 மணி முதல் அதிகளவான மழை வீழ்ச்சி ( 103.0 மி.மீ.) அவிசாவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பாதுக்காவில் 83.0 மி.மீ மழை வீழ்ச்சியும், கேகாலை மாவட்டத்தின் வரகாபொலவில் 60.5 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.