அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் சாதனையை சமன் செய்த இந்திய அணி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி அவுஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது.

டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்திய அணி

இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய வெற்றி, இந்த வருடத்தில் இந்திய அணி பெறும் 38-வது வெற்றியாகும்.

இதன்படி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணி இந்த வருடத்தில் தற்போது வரை 38 வெற்றிகளை பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்திய அணி 19 ஆண்டுகால அவுஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

சாதனை

2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட அவுஸ்திரேலிய அணி அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது.

இதுவே ஒரு வருடத்தில் ஒரு சர்வதேச அணி பெற்ற அதிக வெற்றியாக இருந்தது. இதனையே தற்போது இந்திய அணி அந்த சாதனையை சமன் செய்துள்ளது.

20 ஓவர் உலகக் கிண்ண தொடர் வரவிருக்கும் சூழலில் அவுஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடிக்க இந்திய அணிக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது.

இதனால் விரைவில் இந்திய அணி அந்த சாதனையை படைக்கும் இந்திய கிரிக்கெட் தரப்புக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: webeditor