அவுஸ்திரேலியாவில் பல கடற்கரைகள் மூடப்பட்டன!
48 மணி நேரத்தில் 4 சுறா தாக்குதல்கள்!
ஆஸ்திரேலியாவில் (Australia) 48 மணி நேரத்தில் நான்கு சுறா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய சம்பவம் நியூ சவுத் வேல்ஸில் (New South Wales) உள்ள பாயிண்ட் ப்ளோமர் (Point Plomer) அருகே நடந்தது. அங்கு 39 வயதுடைய நபர் தேசிய பூங்காவுக்கு (national park) அருகில் கடலில் சேர்பிங் (surfing) செய்தபோது சுறா கடித்தது. அவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிட்னி (Sydney) மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் சுறா தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கனமழை காரணமாக கடல் ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர், லைஃப்கார்டுகள் (lifeguards) மற்றும் கடல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய தலைநகரப் பிராந்தியத்தில் பாதுகாப்பான கடலோர அனுபவத்தை ஊக்குவிக்கும் சர்ஃப் லைஃப் சேவிங் நியூ சவுத் வேல்ஸ் (Surf Life Saving NSW) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவன் பியர்ஸ் (Steven Pearce) கடற்கரையில் நீரின் தரம் மோசமாக உள்ளதால் மக்கள் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வடக்கு கடற்கரையில் நீச்சல் செய்ய நினைத்தால் யோசித்துவிட்டு செல்லுங்கள். மோசமான நீர் தரம் காரணமாக புல் ஷார்க் (bull shark) எனப்படும் சுறாக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரண்டு பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். கடற்கரைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் நீச்சல் குளங்களுக்கு செல்லுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பாயிண்ட் ப்ளோமரில் சுறா தாக்குதல் நடந்ததாக நியூ சவுத் வேல்ஸ் ஷார்க் ஸ்மார்ட் (NSW SharkSmart) உறுதிப்படுத்தியது. இதையடுத்து டவுன் பீச் (Town Beach) மற்றும் கிரசண்ட் ஹெட் (Crescent Head) இடையே உள்ள கடற்கரைகள் மூடப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை சிட்னி துறைமுகத்தில் உள்ள நீல்சன் பூங்காவுக்கு (Nielsen Park) அருகில் 12 வயது சிறுவனை சுறா கடித்ததில் படுகாயமடைந்தார். சிறுவன் தனது நண்பர்களுடன் பாறையின் அருகே நீந்திக் கொண்டிருந்தபோது சுறா தாக்கியது.
கனமழை காரணமாக நீர் கலங்கலாக இருந்ததால் சுறா தாக்கியது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
🦈சிட்னியில் சுறா தாக்குதல் – எவ்வளவு அரிதானது?
கடந்த 50 ஆண்டுகளில் சிட்னி துறைமுகத்தில் நான்கு சுறா தாக்குதல் சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்த வாரம் எலிசபெத் விரிகுடாவில் (Elizabeth Bay) ஒரு பெண்ணை சுறா கடித்தது.
புல் ஷார்க் வகை சுறாக்கள் நன்னீர் மற்றும் உவர்நீரில் வாழக்கூடியவை.
ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 20 சுறா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகின்றன. அதில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர்.
கனமழை, கலங்கலான நீர் மற்றும் மீன்கள் நடமாட்டம் அதிகரிக்கும் போது சுறா தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
புயல் காரணமாக கடல் நீர் கலங்கலாக இருந்ததால் சுறா தாக்கியிருக்கலாம் என்று நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் சூப் ஜோசப் மெக்நல்டி (Supt Joseph McNulty) கூறியுள்ளார்.
டீ ஒய் (Dee Why) கடற்கரையில் 11 வயது சிறுவன் சேர்பிங் செய்தபோது சுறா கடித்ததில் உயிர் தப்பினார். சுறா பலமுறை சேர்ப் (Surf) போர்டை (surfboard) கடித்து சேதப்படுத்தியது. பின்னர் மற்ற சேர்ப் (Surf) வீரர்கள் சிறுவனை காப்பாற்றினர்.
மேற்கூறிய சம்பவங்களில் புல் ஷார்க் வகை சுறாக்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழை மற்றும் வெப்பமான நீர் காரணமாக மீன்கள் கடற்கரைக்கு வருகின்றன. இதனால் சுறாக்கள் கடற்கரைக்கு வருகின்றன என்று ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் (James Cook University) கடல் உயிரியலாளர் பேராசிரியர் ஜோடி ரூமர் (Professor Jodie Rummer) கூறியுள்ளார்.
காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலை அதிகரிப்பதால் சுறாக்கள் கடலோரப் பகுதிகளில் அதிக நேரம் செலவிடுகின்றன என்று குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Queensland University of Technology) சுறா நடத்தை நிபுணர் டாக்டர் விக்டோரியா காமிலியேரி-ஆஸ்க் (Dr Victoria Camilieri-Asch) கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 20 சுறா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகின்றன. எனவே கடற்கரைகள் மூடப்பட்டிருந்தால் மக்கள் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

