வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்..!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் இது தொடர்பான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கும் அரச வைத்திய அதிகாரி என்ற ரீதியில், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் அனுமதியின்றி ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிட்டமைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடம் ‘அத தெரண’ வினவியபோது, ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தனது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

