மினுவாங்கொடையில் வீசிய பலத்த காற்று: பல வீடுகள் சேதம்..!

மினுவாங்கொடையில் வீசிய பலத்த காற்று: பல வீடுகள் சேதம்..!

மினுவாங்கொடை – ஹொரம்பெல்ல போதிபிஹிடுவல பிரதேசத்தில் இன்று (18) காலை 7.30 மணியளவில் வீசிய பத்த காற்று காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள விகாரையொன்று, பாடசாலையொன்று மற்றும் 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த காற்று நிலைமை காரணமாக பிரதேசத்தில் 3 வீடுகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அத்துடன், பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் பிரதேசத்திலுள்ள வீடுகள் மற்றும் வீதிகளுக்கும் பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சேதமடைந்த வீடுகளைப் பார்வையிடுவதற்காக மினுவாங்கொடை பிரதேச செயலாளர் தனுஜா ராஜகருணா, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி, வேயங்கொடை இராணுவ முகாம் அதிகாரிகள், மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் அங்கு சென்றிருந்தனர்.

Recommended For You

About the Author: admin