திடீர் என சரிந்து மடிந்த சுதந்திர தேவி சிலை -பிரேசிலில் நடந்த சம்பவம்

பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் சக்திவாய்ந்த புயலின் போது, 24 மீட்டர் உயரமான சுதந்திர தேவி சிலையின் பிரதியொன்று கவிழ்ந்து விழுந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில், சிலை மெதுவாக சாய்ந்து வாகன நிறுத்துமிடத்தில் மோதும் காட்சி பதிவாகியுள்ளது.

இச் சிலை 11 மீட்டர் உயரமான கான்கிரீட் அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலை விழுந்தபோதும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இதன் போது பாதுகாப்பாக இடிபாடுகள் அகற்றப்பட்டடுள்ளன.

குறித்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Recommended For You

About the Author: admin