பலத்த மழைக்கு வாய்ப்பு! வானிலை எதிர்வுகூறல் : டிசம்பர் 9 முதல் மழை தீவிரமடையும்;
நாட்டில் நாளை (டிசம்பர் 09) முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரையில் மழை மேலும் தீவிரமடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 08, 2025) எதிர்வு கூறியுள்ளது.
தீவிரமடையும் மழையின் அளவு:
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய மழை நிலவரம்:
இன்று மாலை வேளையில், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை மற்றும் இடி மின்னலின்போது பொது மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அனர்த்தங்களிலிருந்து விலகியிருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

