உந்துருளி திருட்டு இருவர் சிக்கினர்..!
உந்துருளி திருட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் வெலிவேரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சீதுவ பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 மற்றும் 25 வயதுடைய தொடுவாவ மற்றும் வெலிவேரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களால் திருடப்பட்ட இரண்டு உந்துருளிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

