ஜாகிர் நாயக், பங்களாதேஸுக்குள் நுழையத் தடை
எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் நடைபெறும் மத நிகழ்வில் உரையாற்ற, உள்ளூர் அமைப்பு ஒன்று அவரை அழைத்திருந்தது.
மேலும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், அவர் ஒரு மாதம் பங்களாதேஸில் தங்கவும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டது. எனினும் தற்போது பங்களாதேஸின் உள்துறை அமைச்சு, ஜாகிர் நாயக் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.

