பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வந்துள்ள நிலையில், அவரிடமிருந்து 2.7 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர் 28 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பயணப் பைகளுக்குள் மறைத்து இந்தப் போதைப்பொருள் தொகை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin