2025 உயர்தரப் பரீட்சை: நவம்பர் 10 முதல் ஆரம்பம் – தேர்வுகள் திணைக்களம் அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்கள், நாடு முழுவதும் பரீட்சையைச் சீராக நடத்துவதற்கான விநியோகம் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். இதற்கெனத் நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, அத்துடன், கடமைகளுக்காக அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை அனைத்து முக்கிய பாடத் துறைகளையும் உள்ளடக்கி நடைபெறும்.
இதற்கிடையில், பரீட்சை தொடர்பான அனைத்துத் தனியார் வகுப்புக்கள் (Tution Classes), கருத்தரங்குகள் (Seminars) மற்றும் செயலமர்வுகள் (Workshops) என்பன நவம்பர் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என்று திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை மீறும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் பரீட்சைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள்.



