கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்ததுடன் தொகையான கஞ்சாவும் மீட்பு..!
கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து உலர்ந்த கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்களை தனமல்வில பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தனமல்வில பொலிஸ் பிரிவின் ” நிகாவெவ” பகுதியில் இந்த கஞ்சா தோட்டம் இரகசியமாக பராமரிக்கப்பட்டுவந்துள்ளதுடன் தனமல்வில பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பின் போது கஞ்சா பயிரிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) பகல் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது பெருமளவு கஞ்சா செடிகளும் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 128 கிலோ உலர்ந்த கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டன.

