துருக்கிய வெளியுறவு அமைச்சகம்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த திட்டத்துக்கு ஹமாஸ் நேற்று று (ஒக்டோபர் 3) வழங்கிய பதில், காசாவில் உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், பிராந்தியத்திற்கு தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்கவும், நீடித்த அமைதியை நிலைநிறுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வழிவகுக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் பேச்சுவார்த்தைகளை தரப்புகள் விரைவாகத் தொடங்க வேண்டும். அதேபோல் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இரு-மாநில தீர்வு நடைமுறைக்கு வர வேண்டும்.
துருக்கி பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஆதரித்து, ஆக்கபூர்வமான பங்களிப்புகளைச் செய்யும் என தெரிவித்துள்ளது.

