உவர்மலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய தேர்த்திருவிழா..!
திருகோணமலை உவர்மலை திருவருள்மிகு பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேத சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய தேர்த்திருவிழா இன்று (13.09.2025) இடம்பெற்றது.
இதன்போது விஷ்ணு பெருமானுக்கு விசேட பூசை நிகழ்வுகள் இடம்பெற்று பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேதராக பக்தர்கள் புடைசூழ எம்பெருமான் தேரில் வீதியுலா வந்தார்.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாளை (14) தீர்தோற்சவமும், நாளை மறுநாள் (15) தெப்போற்சவமும், திருப்பூங்காவனமும் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.


