திருகோணமலையில் தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவதைக் கண்டித்து ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குதல் மற்றும் வனப்பகுதிகளை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஆக்கிரமித்தல் ஆகியவற்றைக் கண்டித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
திருகோணமலை, முத்துநகர் பகுதியில் உள்ள 600 ஏக்கர் வயல் நிலங்கள் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதை நிறுத்தவும், வன நிலங்களை ஆக்கிரமிப்பதை எதிர்க்கவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டும், அதிகாரிகள் எந்தவொரு தீர்மானத்தையும் வழங்காததாலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக வசந்த முதலிகே தெரிவித்தார்.

