அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, சந்தேகநபர் கைது
அம்பலாந்தோட்டை, ஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிங்கமவைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
41 வயதுடைய சந்தேகநபர், தான் பயன்படுத்திய துப்பாக்கியுடன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

