உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூவர் பலி

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு மாத குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா ஒரே இரவில் கார்கிவ் நகரை நோக்கி 50 ட்ரோன்களை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆரம்பமானதிலிருந்து கார்கிவ் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அறுவர் உயிரிழந்ததுடன் மேலும் 80 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin