ஒரே நாளில் நாட்டு மக்களையே பயத்தில் நடுங்க வைத்த சம்பவம்!

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு தடவை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கம் அதிகாலை 12.56 மணியளவில் ரிக்டரில் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதேவேளை, இரண்டாவது நிலநடுக்கம் இன்று (07) அதிகாலை 1.05 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 67.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இவ் இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தில் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Recommended For You

About the Author: admin