USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை
உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ள அந்த முகவரகம், தமது அனைத்து பணியாளர்களும் அமெரிக்காவுக்கு மீளத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதற்கைமய, முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களைத் தவிர, USAID இன் ஏனைய அனைத்து நேரடி மற்றும் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களும் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு வெளியே பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கான ஒரு திட்டத்தைத் தயாரித்து வருவதாகவும், அதன் கீழ் அவர்கள் 30 நாட்களுக்குள் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் USAID தெரிவித்துள்ளது.