விவசாயிகளின் நலன் கருதி 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல அரசு திட்டம்

விவசாயிகளின் நலன் கருதி 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல அரசு திட்டம்

தென்கிழக்கு ஆசியாவில் தீவு நாடாக தாய்வான் உள்ளது. மிக சிறிய தீவு நாடான தாய்வானில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விவசாய தொழிலை மேம்படுத்தும் முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நாட்டில் உடும்புகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை அவை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் அந்த நாட்டின் விவசாயிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.

இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள உடும்புகளில் 60 சதவீதத்தை அழிக்க தாய்வான் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்த நாட்டின் வனத்துறை கணக்கீட்டின்படி 2 லட்சம் உடும்புகளில் இருந்து 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல உள்ளது.

இதற்காக வேட்டைக்காரர்கள் நியமிக்கப்பட்டு ஒரு உடும்புக்கு ரூ.1,300 (15 அமெரிக்க டாலர்) சன்மானமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin