கண்டி, பன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆண் மற்றும் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.