ஐ.தே.க -ஐ.ம.சக்தி கூட்டணி

உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்குத் தேவையான ஒப்பந்தங்களை, ஒரு வாரத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஜக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த முடிவு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடல்களை விரைவுபடுத்தவும், இந்த விடயத்தில் முறையான உடன்பாட்டை எட்டவும் ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரைக் கொண்ட குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டதாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin