பஸ்ஸில் விழுந்து கிடந்த பணத்தை உரியவரிடம் கையளித்த CTB பஸ்ஸின் உதவியாளர்!
கொழும்பில் இருந்து இரவு 11.00 மணிக்கு புறப்படும் மொரவெவ பகுதிக்கு வருகை தந்த அரசுக்கு சொந்தமான பஸ்ஸில் 35ஆயிரம் ரூபாய் தவறி விடப்பட்ட நிலையில் மீண்டும் அப்பணத்தை உரியவரிடம் கையளித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
களுத்துறை மாவட்டம் மஹகம-வெல்கம என்ற இடத்திலிருந்து ஆர்.ஏ.கருணாவதி என்ற வயோதிப பெண் திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேசத்திற்கு மரண வீட்டுக்கு (தான கெதர) வருகை வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வயோதிபப்பெண்ணின் பணம் தவறி விழுந்துள்ளது.இதனையடுத்து குறித்த பஸ்ஸின் டிக்கெட்டை வைத்துக் கொண்டு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து கேட்டபோது ஒரு தொகை பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பஸ்ஸின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பஸ்ஸின் உதவியாளர்களை நாம் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார கஸ்ட நிலை ஏற்பட்டுள்ள போதிலும் பஸ்ஸில் கிடந்த பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு முன் வந்தமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இவ்வாறான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை நாம் மறக்க முடியாது. ஆகவே குறித்த பஸ்ஸின் உதவியாளருக்கு எமது ஊடக வலையமைப்பு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.