உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! : கூட்டணி அறிக்கை
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களின் விபரங்களை தமக்கு அனுப்பி வைக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பரமசிவம் சிறீதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எனக் கூறிக்கொண்டு கட்சியை குறுக்குவழியில் அபகரிக்க முயன்ற மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து குழுவினரின் செயற்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.