மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் தடங்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். வாரத்தில் முதல் நாள் தான். இருந்தாலும் பிரச்சனைகளை கண்டு நீங்கள் துவண்டு போகக்கூடாது. நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அனுபவ சாலிகளின் ஆலோசனையை பெறுங்கள். கடவுள் மீது பாரத்தை போடுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். சின்ன சின்ன வியாபாரிகளுக்கு கூட நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும் சுப செலவுகள் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக வேலை செய்வீர்கள். பெருசாக பிரச்சனைகள் இருக்காது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கூடுதல் சம்பளம், கூடுதல் போனஸ் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மன நிறைவான நாள் இன்று. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். நீண்ட நாள் வசூல் ஆகாத பணம் கையை வந்து சேரும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். பிரிந்த உறவுகளும் ஒன்று சேரும். சேமிப்பு உயரும். பிள்ளைகளால் மன நிம்மதி இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று திறமையாக சிந்திப்பீர்கள். பெரிய அளவில் இருக்கும் பிரச்சனைகளை கூட சர்வசாதாரணமாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டு கிடைக்கும் நாள். நல்ல நல்ல அனுபவங்களை சேகரிக்க கூடிய நாளாகவும் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல் இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை உடனடியாக முடிக்க முடியாது. நீண்ட தூர பயணத்தின் மூலம் அலைச்சல் சில பேருக்கு உண்டாகலாம். முதியவர்கள் உங்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டவும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். டார்கெட்டை சரியான நேரத்தில் முடித்து விடுவீர்கள். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். பொங்கல் செலவுக்கு என்ன செய்வது என்று சில பேர் சிந்திப்பீர்கள். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஜாக்கிரதை அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அன்பும் பாசமும் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்துவீர்கள். காதல் திருமணம் வரை செல்லும். வீட்டில் இருப்பவர்கள் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். நல்லது நடக்கும் நாள். சுப செலவுகள் ஏற்படும் நாள். வியாபாரமும் தொழிலும் நினைத்தபடி நல்லபடியாக செல்லும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். சோம்பேறித்தனத்திலிருந்து தூரமாக ஒதுங்கி நிற்பீர்கள். வேலையில் நீங்கள் காட்டும் ஆர்வம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். சின்ன சின்ன வியாபாரிகள் கூட நல்ல லாபத்தை சம்பாதிக்கும் அளவுக்கு இன்று வாய்ப்புகள் தேடி வரும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வேகத்தை விட விவேகத்தோடு செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் நஷ்டமான விஷயங்களை கூட லாபமாக மாற்றும் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். திறமையாக உங்களுடைய வேலையை செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் லாபம் நஷ்டங்களை பற்றி சரியாக புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வாழ்க்கை துணைவோடு ஒற்றுமை உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.