வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு நளிர் பௌன்டேசன் அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க அமெரிக்க சக்காத் பௌன்டேசன் அமைப்பினால் உலருணவு பொதிகள் (04) வழங்கி வைக்கப்பட்டது.

நளீர் பௌன்டேசன் அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.ஏ.நளீரின் அயராத முயற்சியின் பலனாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்ய வேண்டும் என்று பல அமைப்புக்களின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் அடிப்படையில் அமெரிக்க சக்காத் பௌன்டேசன் அமைப்பினரிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைய அதன் செயலாளர் பஸாஹுல் ரஹ்மானினால் சுமார் ரூ. 12 ஆயிரம் பெறுமதியான உலருணவு பொதிகள் மத்திய முகாம் 3ஆம் வட்டார பல்தேவைக் கட்டிட வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin