தொலைதூரப் பயணங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் தேர்ந்தெடுப்பது விமானம் தான். பயண நேரம் குறைவு, சொகுசு, எளிதில் கிடைக்கும் சேவை போன்ற காரணங்களால் தான் விமானப் போக்குவரத்துத் துறை தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 102,465 விமானங்கள் வானத்தில் ஏதேதோ தேசங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. உண்மைதான். 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஓராண்டுக்குச் சராசரியாக 37.4 மில்லியன் விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஏனெனில் வர்த்தக, சுற்றுலாத் துறைகள் உலகம் முழுவதும் வருமானம் கொழிப்பதாக இருப்பவையே காரணம்.
இவ்வளவு நெரிசலின் காரணமாக, இத்தனை விமானங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. விளைவு? விபத்துகள், கடலில் விழுந்த பகுதிகளை கண்டுபிடிப்பதற்கே வாரக்கணக்கில் ஆகின்றன.
மேலும் பயணிகளின் பலி எண்ணிக்கை அச்சத்தின் அதி உயரத்தில் நம்மை நிறுத்திவிடுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியில் பல சாதனைகளை மனிதன் நிகழ்த்தியிருந்தாலும் இம்மாதிரியான விபத்துகளைத் தவிர்க்க முடிவதில்லை.
பாதுகாப்பு பயம்.
இது குறித்த அச்சம் ஒவ்வொரு விமானப் பயணிக்கும் நிச்சயம் இருக்கிறது. எனவே விமானத்தின் பாதுகாப்பு பற்றி ஏராளமானோர் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் இவை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவையே. இந்நிலையில் AirlineRatings.com இணையதளம் பாதுகாப்பான விமானங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான Airline Ratings உலகின் சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்ட 20 விமானங்களை பட்டியலைத் தயாரித்திருக்கிறது.
இதற்கென உலகம் முழுவதும் உள்ள சிறந்த 405 விமானங்களைப் பற்றிய பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள், போன்ற தகவல்களை திரட்டி இந்த ஆய்வு முடிவினை வெளியிட்டிருக்கிறது. 20 பிரிவுகளின் கீழ் இந்த தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து இந்தப்பட்டியலில் முதலிடம் பிடித்த Qantas விமானம் இந்தவருடமும் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. லண்டன் நகரத்திலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் இந்த விமானம் தொடர்ந்து 17 மணிநேரம் இடைநில்லாமல் பயணிக்கக்கூடியது.
இந்தப்பட்டியல் ஆங்கில அகர வரிசைப்படி (Alphabetically) வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டியல்…
1) ஏர் நியூசிலாந்து (Air New Zealand),
2) அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines),
3) ஆல் நிப்பான் ஏர்வேஸ் (All Nippon Airways),
4) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines),
5) ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ் (Austrian Airlines),
6) பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways),
7) கேதி பசிபிக் ஏர்வேஸ் (Cathay Pacific Airways),
8)எமிரேட்ஸ் (Emirates),
9) ஈவா ஏர் (EVA Air),
10) ஃபின்னாய்ர் (Finnair),
11) ஹவாயன் ஏர்லைன்ஸ் (Hawaiian Airlines),
12) கே.எல்.எம் ( KLM),
13) லுஃப்தான்சா (Lufthansa),
14) குவாண்டாஸ் (Qantas),
15) கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways),
16) ஸ்கேண்டிநேவியன் ஏர்லைன் சிஸ்டம் (Scandinavian Airline System),
17) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines),
18) சுவிஸ் (Swiss),
19) யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines)
20) விர்ஜின் குரூப் ஆப் ஏர்லைன்ஸ் (Virgin group of airlines).