ஹப்புத்தளை வேன் விபத்து – இருவர் பலி, 14 பேர் வைத்தியசாலையில்
ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், இதன் போது காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.