போதைப் பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் கைது

பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வார விடுமுறையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கொண்டு வருபவர்களை கைது செய்வதற்காக ஹட்டன் பிரிவின் உத்தியோகப்பூர்வ மோப்ப நாய்களின் உதவியுடன் வீதித் தடைகளைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிவனொளி பாதமலை யாத்திரை காலபம் நிறைவடையும் முடியும் வரை தேடுதல் பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin