முன்னாள் மா.ச. உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது

முன்னாள் மா.ச. உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது – காணிக்கு விரைவாக நஷ்டஈடு பெற ரூ. 9 மில். இலஞ்சம்

ரூ. 9 மில்லியனை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இருவர் பிட்டகோட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெறும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்ட குறித்த வர்த்தகரின் உறவினரின் காணிக்கு நட்டஈடு வழங்குவதை விரைவுபடுத்தியமைக்காக இந்த இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் டொரிங்டன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் காணியொன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து சுமார் ரூ. 10 கோடி நஷ்டஈட்டை விரைவாக பெற, உதவியமை தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இலஞம்சம் பெறும்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிய காணி உரிமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபர்களுக்கு முறைப்பாட்டாளர்களிடமிருந்து இலஞ்சமாக ரூ. 1 கோடியைப் பெறப் போகும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிட்டகோட்ட பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளாரால் இலஞ்சம் பெறப்படும்போது கைது செய்து, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கைதான சந்தேகநபர்களில் ஒருவர், யானைக் குட்டியை அனுமதியின்றி வைத்திருந்த சர்ச்சைக்குரிய சம்பவத்துடன் தொடர்பான நீதிபதியான திலிண கமகேவின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சலோச்சனா வின்ஸ்டன் கமகே (50) என தெரிவிக்கப்படுகின்றது.

மற்றையவர் வர்த்தகரான தினேஷ் ரத்நாயக்க (45) என்பவராவார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin