முழு உடம்பும் நீல நிறத்தில் பிறந்த சிசு-இலங்கையில் அதிசயம்..!

முழு உடம்பும் நீல நிறத்தில் பிறந்த சிசு-இலங்கையில் அதிசயம்..!

முழு உடலும் நீல நிறத்தில் பிறந்த இலங்கையில் பிறந்த 1 ஆவது சிசு.

ஒரே இரத்த உறவுகளுக்கே இவ்வாறான சிசுக்கல் பிறக்குமாம்.

முழு உடம்பும் நீல நிறத்தை உடைய குழந்தை ஒன்று மதவாச்சி அரச மருத்துவமனையில் பிறந்துள்ளது.

Congenital Methemoglobinemia என அழைக்கப்படும் நோய்க்கு உட்பட்டுள்ள இந்த சிசு விசேட பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்த வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவின் வைத்திய நிபுணர் RSUC ரணவக கூறுகிறார்.

குழந்தையின் இரத்த பரிசோதனை உட்பட ஏனைய தகவல்களை பெறுவதற்காக சிசுவின் இரத்தம் ஜெர்மனிக்கு அனுப்பி தகவல்கள் பெறப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இரத்தப் பரிசோதனை வசதிகள் நாட்டில் இல்லாமல் இருந்தாலும் இந் நோய்க்கான மருந்துப் பொருட்கள் கையிருப்பில் இருந்ததால் சிசுவின் உயிரைக் காப்பாற்ற முடியுமாக இருந்தது எனவும் தற்போது சிசு அனுராதபுர வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

முழு உடம்பும் நீல நிறமாகமாறுதல் சுவாசிக்க கஷ்டப்படுதல் தசை நார்கள் வளர்ச்சியடையாமை ஆகியன இந்நோய்க்கான அடையாளங்கள் எனக் கூறப்படுகின்றன.

இந்த நோய் பொதுவாக ஒரே இரத்த உறவுகள் திருமணம் செய்வதால் ஏற்படுவதாகவும்,ஆனால் இந்த சிசுவின் பெற்றோர்கள் இருவரும் ஒரே இரத்த உறவுகள் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் மேலதிக வைத்திய பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான சிசு ஒன்று இலங்கையில் பிறந்தது இதுவே முதல் தடவை எனவும்சுமார் ஒரு இலட்சம் சிசுக்களில் ஒன்றுக்கு இந்த நோய் ஏற்படுவதாகவும் வைத்திய தகவல்கள் கூறுகின்றன.

Recommended For You

About the Author: admin