முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
அதற்காக பழங்கால மதிப்புகள் கொண்ட அமைச்சர்களின் இல்லங்கள் ஒதுக்கப்படும் என்று கூறிய அவர், இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த இல்லங்கள் தொடர்பில் விசேட கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.