CID இற்கு வருகை தந்த நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார
– பெயர் தொடர்பில் ஏற்பட்ட அசௌகரியம் குறித்து முறைப்பாடு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இன்று (16) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்தார்.
பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயரின் முன் கலாநிதி என்று குறிப்பிட்டதன் மூலம் தமக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம் குறித்து ஆராயுமாறு கோரியே அவர் இந்த முறைப்பாட்டை சமர்ப்பிக்கவே அவர் வருகைத் தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தம்மை அவதூறு செய்யும் நோக்கில் யாராவது பொய்யான தகவல்களை பரப்புகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.