தந்தை கண் முன்னெ பறிபோன மகளின் உயிர் !

இன்று (16) காலை, கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக கெட்டம்பே திசையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் வாகனத்துடன் மோதி கீழே விழுந்த நிலையில், மற்றொரு வாகனத்தில் மகளின் தலை சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கிய 17 வயதுடைய மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவர் கண்டி கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

விபத்தில் தந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin