சிரிய கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமஸ்கஸுக்குள் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அஸாத் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தை பலப்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக சிரிய இராணுவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் ‘இப்போது அசாத்திடமிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறியுள்ளனர்.
சிரிய ஜனாதிபதி டமாஸ்கஸில் இருந்து இடம் குறிப்பிடாத இடம் ஒன்றுக்குத தப்பிச் சென்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து மாஸ்கஸில் உள்ள ஒரு முக்கிய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி, கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டிருந்த டமாஸ்கஸ் அருகே உள்ள ஒரு பெரிய சிறையில் இருந்த அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, பிரதமர் முகமது காசி அல்-ஜலாலி, சிரிய மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்தத் தலைமைக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.