வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான செய்தியொன்று வெளியாகியுள்ளது.

10,000 பேருக்கு கிடைக்கும் அனுமதி
அதன்படி இலங்கையில் இருந்து 10,000 புலம்பெயர்ந்த பணியாளர்களை அழைப்பதற்கு மலேசிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்யைில், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவுவதற்கான எமது அரசாங்கத்தின் முயற்சிகளில், இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானமும் ஒன்றாகும்.

தொழில் தருநர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு, தொழில் தருநர்களையும், வணிகங்களையும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை பணியாளர்களை பணியமர்த்துவதில் ஆர்வமுள்ள தொழில்தருநர்கள் அமைச்சின் புலம்பெயர் தொழிலாளர் முகாமைத்துவ நிலையம் மற்றும் நாட்டின் தொழிலாளர் திணைக்களத்தினை தொடர்பு கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor